REWARDS FOR CHANGE
Join This Is Our Shot in getting Canada #TogetherAgain. Enter for a chance to win one of thousands of prizes across Canada in Rewards for Change.
This Is Our Shot to be
#TogetherAgain
இப்பெரும்புல நோயின் காரணத்தால் நீங்கள் மிகவும் இழந்து நிற்பது எதனை? – குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுதல், விளையாட்டு ஒன்றினைப் பார்க்கச் செல்லுதல் அல்லது சாதாரணமாக ஒன்று கூடுதல்: இவற்றில் எதுவாகலாம்? இவை எல்லாவற்றையும் மீண்டும் செய்ய நாங்கள் விரும்புகிறோம்!
This Is Our Shot to be #TogetherAgain என்பது இப்பொழுது உள்ள பெரும்புல நோயுக்கு எதிராக கனேடியக் குடிமக்களை ஒன்று திரட்டி, ஒருவருக்கு ஒருவர் தடுப்பு மருந்து எடுப்பதில் உள்ள தயக்கத்தை அகற்றி, நம்பிக்கை ஊட்டுவதற்காக ஆரம்பித்துள்ள ஓர் இயக்கம் ஆகும். இதனால் நாம் ஒன்று சேர்ந்து இப்பெரும்புல நோயுக்கு ஒரு முடிவு கட்ட முடியும்.
ஒன்றிணைந்து இந்த #TogetherAgain முயற்சியில் நாம் எம்மையும், எமது குடும்பங்களையும் எமது சமூகங்களையும் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் . முதலாவதாக, தடுப்பு மருந்தினை எடுப்பது சிலருக்கு இலகுவாக இருப்பது போல எல்லோருக்கும் அப்படி அமைந்து விடாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே நாம் எல்லோரும் ஒன்றிணைந்து முயன்று, ஒவ்வொருவருக்கும் சரியான பொருண்மைகள் மற்றும் தகவல் சென்றடைகின்றன என்பதை உறுதி செய்ய வேண்டும் அறிவுடன் கூடிய தீர்மானங்களை அவர்கள் எடுக்க அவர்களுக்கு இவை தேவைப்படுகின்றன.
This Is Our Shot பெரும்புல நோயுக்கு முடிவு கட்டும் முயற்சி, கனடா
கோவிட்-19 தடுப்பு மருந்து தகவல்
[XXXXX] எண்ணிக்கையிலான கோவிட்-19 தடுப்பு மருந்துப் பங்களவுகள் மக்களுக்கு ஏற்றப்பட்டு விட்டன.
தடுப்பு மருந்து எடுப்பது பற்றி உங்களிடம் கேள்விகள் இருக்கலாம். உங்களுடைய நோய் தடுப்பு மருந்து ஊசியினை நீங்கள் நம்பிக்கையுடன் ஏற்றிப் பெரும்பல நோயுக்கு முடிவு கட்டுவதற்கு, உங்களுக்கு வலுவூட்டுவதற்கு நாங்கள் இங்கு தயாராக இருக்கிறோம்.
பொருண்மைகளை அறிந்து கொள்ளுங்கள். This Is Our Shot to be #TogetherAgain.
தடுப்பு மருந்தேற்றும் சந்திப்பினை ஒழுங்கு செய்ய நீங்கள் தயாராக இருக்கும் பொழுது…
உங்களுடைய மாகாணத்தின் பெயரில் சொடுக்குங்கள் (Click): இதனைத் தொடர்ந்து உங்கள் மாகாணத்துக்குரிய தடுப்பு மருந்து ஏற்றும் சந்திப்புக்களுக்கான சேவை நுழைவாயிலுக்கு (portal) இட்டுச் செல்லப்படுவீர்கள் இதற்கு மாற்று வழியாக Vaccine Hunters Canada இணையத் தளத்துக்குச் செல்லுங்கள். நாடு முழுவதிலும் செயற்படும் தடுப்பு மருந்து வழங்கும் சிகிச்சை நிலையங்களை அறிய முடியும். இவற்றில் மருந்தகங்களும்அடங்கி இருக்கும்.
57,020
[XXXXX] எண்ணிக்கையிலான கோவிட்-19 தடுப்பு மருந்துப் பங்களவுகள் விநியோகம் செய்யப்பட்டு விட்டன.
52,913
[XXXXX] எண்ணிக்கையிலான கோவிட்-19 தடுப்பு மருந்துப் பங்களவுகள் மக்களுக்கு ஏற்றப்பட்டு விட்டன.
இத்தரவு கனேடிய அரசிடம் இருந்து வந்து உள்ளது.
https://art-bd.shinyapps.io/covid19canada/
நேரடி நிகழ்வு நகர்சேரும் ஒன்றுகூடல்கள்
This Is Our Shot to be #TogetherAgain இயக்கம் கிரமமான முறையில் நேரடி நகர்சேரும் ஒன்றுகூடல் தகவல் கூட்ட நிகழ்ச்சிகளை, அருவியோட்ட (stream) முறையில் ஒளிபரப்புகின்றது.
நிகழ்ச்சிக்கு முன்பாகவோ அல்லது அது நிகழ்ந்து கொண்டிருக்கும் பொழுதோ நீங்கள் உங்கள் கேள்விகளை சமர்ப்பிக்கமுடியும்.
நீங்கள் எப்படி இம்முயற்சியில் ஈடுபட முடியும்
This Is Our Shot to be #TogetherAgain பிரச்சாரம்
உங்களில் எவரும் இம்முயற்சியில் பங்குபற்ற முடியும். தடுப்பு மருந்தினை மக்கள் எடுப்பதனால் கனடாவில் கோவிட் பெரும்புல நோயுக்கு முடிவு கட்ட முடியும் என்ற செய்தியைப் பரப்புவதற்கு நீங்கள் உதவுவீர்கள்.
- உங்களுக்கு வழங்கப்படும் நேரம் வந்தவுடன் தடுப்பு மருந்தினை எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு ஷேர்ட் மேலாடையை விலைக்கு வாங்குவதன் மூலம் #ThisIsOurShotCA #TogetherAgain
- தடுப்பு மருந்து எடுப்பதற்கான உங்களுடைய சந்திப்பு நேரம் வருகையில் அவ்வேளை உங்கள் ஷேர்ட் மேலாடையை அணிந்து அங்கு வருவதுடன் உங்களுக்கு இடப்படும் பிளாஸ்டர் (band-aid) துண்டின் மீது யாரும் ஒருவரின் (அல்லது எதுவொன்றின்) பெயரிட்டு அர்ப்பணம் செய்யுங்கள்.
- உங்கள் ஷேர்ட் மேலாடையை அணிந்து கொண்டு உங்கள் பிளாஸ்டர் துண்டினைக் காட்டியவாறு நீங்கள் உள்ள ஒரு படத்தை அல்லது வீடியோவை வெளியிட்டு அதனை முனையொட்டு (tag) செய்து உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துக்கு அனுப்பி, உங்களைப் போலவே அவர்களும் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுங்கள்.
- அத்துடன் #ThisIsOurShotCA #TogetherAgain இனைப் பயன்படுத்தி வேறு தகவல்களையும் வெளியிட்டு, தடுப்பு மருந்து பற்றிய செய்தி மக்கள் மத்தியில் பரவும்படி செய்யுங்கள்.
இதனால் பெறப்படும் வருமானத் தொகை முழுவதும் Kids Help Phone என்ற அறநெறி ஸ்தாபனத்துக்கு வழங்கப்படும்.
This Is Our Shot to be #TogetherAgain இயக்கம் பற்றிய விபரம்
தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பான தன்மை பற்றிய செய்தியை மக்கள் மத்தியில் பரப்புவதற்கும், அதனை எடுப்பதற்கு நிலவும் தயக்கத்தின் இடத்தில் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும் உள்ள தேவையை, இங்குள்ள Grassroots நிறுவனங்கள், கனடா அடங்கிலும் உள்ள ஆரோக்கிய பராமரிப்பு தொழில் நிபுணத்துவப் பணியாளர் குழுக்கள் மற்றும் கனடாவின் மிகப் பிரபல நிறுவனங்கள் ஆகியன உணர்ந்து கொண்டுள்ளன. இவற்றில் அடங்கும் யாவரும் தடுப்பு மருந்தினை எடுப்பதில் மக்களிடையே உள்ள தயக்கத்தினை வெல்வதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து ஓர் ஐக்கியமான குழுவாகச் செயல்பட்டு, குவிந்த நோக்குடன் செறிந்த முயற்சியை மேற்கொள்ளுவது மிகவும் பயனுறுதி கொண்ட ஒரு செயலாக இருக்குமென்று தீர்மானித்து உள்ளனர்.
இப்பொழுது This Is Our Shot to be #TogetherAgain, என்ற தனியொரு இலட்சியப் பதாகையின் கீழ் ஆரோக்கிய துறை தொழில் நிபுணர்கள், முன்னணி நிலைப் பணியாளர்கள், உள்ளுர் சமூகங்கள், கனடாவின் வர்த்தகத் துறையினர் மற்றும் நாடு நன்கறிந்த சிறப்பான தொடர்புகள் கொண்ட பெரியோர் யாவரும் சேர்ந்து கனேடிய மக்கள் மத்தியில் தடுப்பு மருந்து பற்றிய தன்னம்பிக்கையைப் பெருக்குவதற்கு, தமது நேரத்தையும் மூலவளங்களையும் அர்ப்பணித்து கனேடிய மக்கள் மத்தியில் முயன்று வருகின்றனர்.
மிகப் புதிய செய்திகள்
Deprecated: Function _register_controls is deprecated since version 3.1.0! Use Elementor\Controls_Stack::register_controls() instead. in /www/thisisourshot_191/public/wp-includes/functions.php on line 5379
CP24: Growing calls to shorten AZ doses interval
Watch the full interview: https://www.cp24.com/video?clipId=2221114
Hospital News: Toronto respirologist earns support of Canadian icons in #ThisIsOurShot vaccine campaign
Hospital News: Co-led by Dr. Anju Anand, a respirologist at…
Breakfast Television: ‘This is Our Shot’ Aims to Rally Canadians to Get Vaccinated
Breakfast Television: Dina and Sid chat with Olympian Clara Hughes…