நீங்கள் தடுப்பு மருந்து எடுப்பதற்கு முன்பு

பின்வரும் தகவல் இந்த இணையத் தளத்துக்கென்று மருத்துவத் துறை நிபுணர்கள் மற்றும் பொதுசன ஆரோக்கிய வல்லுநர்களால் வரையப்பட்டுள்ளது. கனேடிய அரச அமைப்புகள் மற்றும் விஞ்ஞான, மருத்துவ மூலவளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் இதில் அடங்கி உள்ளது. மருத்துவத் துறையினரின் வைத்திய ஆலோசனையாக இதனைக் கருத வேண்டாம். கோவிட்-19 நோய் தடுப்பு மருந்து பற்றி உங்களிடம் எக்கேள்வி இருந்தாலும் தகைமை வாய்ந்த ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநர் ஒருவரின் அறிவுரையை நாடுங்கள்.

ஆம், முன்பு கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்தவர்களும் இரண்டு டோஸ்களில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கோவிட்-19 தொற்றிலிருந்து மீண்ட பிறகு மீண்டும் நோய்வாய்ப்படாமல் எவ்வளவு காலம் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்பது நிபுணர்களுக்கு இன்னும் தெரியவில்லை. பக்க விளைவுகள் அல்லது உடல்நலக் குறைவு இல்லாமல் ஆன்டிபாடி பதில்செயலை உருவாக்குவதன் மூலம், தடுப்பூசி உங்களைப் பாதுகாக்கும்.

உங்களுக்கு சமீபத்தில் கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்தால், நீங்கள் குணமடைந்து உங்கள் சுயதனிமைக் காலம் முடியும் வரை தடுப்பூசி பெறுவதற்கு காத்திருக்க வேண்டும்.

முதல் டோஸாக mRNA தடுப்பூசியை (ஃபைசர் பயோஎன்டெக் அல்லது மாடர்னா) நீங்கள் பெற்றிருந்தால், இரண்டாவது டோஸாக mRNA தடுப்பூசி உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் முதன்முதலில் பெற்ற அதே வகை தடுப்பூசியைப் பெறுவது விரும்பத்தக்கது, அது தயாராக இல்லை அல்லது அறியப்படாததாக உள்ளது என்றால், அத்தகைய சூழலில் வேறு வகை mRNA தடுப்பூசியைப் பெறலாம். இரண்டுமே சம அளவில் பாதுகாப்பானவை மற்றும் திறன்மிக்கவை.

உங்கள் முதல் டோஸாக நீங்கள் அஸ்ட்ராஜெனெகாவைப் பெற்றிருந்தால், உங்கள் இரண்டாவது டோஸாக அஸ்ட்ராஜெனெகாவைப் பெற நீங்கள் தேர்வு செய்யலாம், ஆனால் உங்கள் இரண்டாவது டோஸுக்கு mRNA தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு NACI இப்போது பரிந்துரைக்கிறது.

கனடாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளுமே, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் கடுமையான நோய்களையும் சமமாகவும் திறன்மிக்க வகையிலும் குறைக்கின்றன, மேலும் இவை அனைத்தும் கோவிட்-19 தொற்றால் மரணம் ஏற்படுவதைத் தடுப்பதில் ஏறத்தாழ 100% திறன்மிக்கவையாக உள்ளன.

முக்கியமான விஷயம் என்னவென்றால், முழு பாதுகாப்பிற்காக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் காலம் கடத்தக் கூடாது. புதிய வைரஸ் வகைகள் உருவாகி வருகின்றன, அவை அதிக பாதிப்பு நிகழ்வுகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், இறப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன, இதைத் தடுப்பதற்கான ஒரே வழி பெருமளவில் தடுப்பூசி போடுவது மட்டுமேயாகும்.

தடுப்பு மருந்தினை எடுத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் அதன் பின்பாகவும் தொடர்ந்து பொதுசன ஆரோக்கிய வழிகாட்டல் முறைகளை பின்பற்றுவது அவசியம் ஆகும். உங்கள் தடுப்பு மருந்தினை எடுத்த பின் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியமாக உள்ளது. இவ்வாறான நடைமுறைகளில் அடங்குவன: உங்கள் கைகளைக் கழுவுதல், உடல்ரீதியாகப் பாதுகாப்பான ஒரு தூரத்தைப் பேணுதல், முகக் கவசம் அணிதல் மற்றும் சுகவீனம் வந்தால் வீட்டில் தங்கிவிடுதல். இவற்றைப் பின்பற்றுதல் முக்கியமாகும் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு :
கோவிட்-19 தடுப்பு மருந்து உடலில் ஏற்றப்பட்ட பின் அதிலிருந்து உங்கள் உடம்பு நோய்க்கான பாதுகாப்பினைப் பெறுவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள் தேவைப்படும். இதன் அர்த்தம் நீங்கள் தடுப்பு மருந்தினை எடுப்பதற்கு முன்பாக உங்களுக்கு நோய் தொற்றியது என்றாலும் அல்லது தடுப்பு மருந்து ஏற்றிய பின்பாக அடுத்து வரும் இரண்டு வாரங்களில் நோய் தொற்றியது என்றாலும், கோவிட்-19 நோயினால் சுகவீனம் அடைவீர்கள். எனவே உங்களுக்கு தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட பின் கோவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் தோன்றும் என்றால் அந்நோய்க்கான பரிசோதனையைச் செய்யுங்கள்.
தடுப்பு மருந்து ஏற்றப்படும் எல்லோரிலும் கோவிட்-19 நோய் வராமல் தடுக்க முடிவதில்லை. ஆனாலும் வைரசுக் கிருமி உடலில் புகுந்து விட்ட மனிதர்களில் தீவிரமான சுகவீனம் உண்டாகும் சாத்தியம் மிகவும் குறைவாகவே இருக்கும்.
இங்கு கிடைக்கக் கூடியனவாக உள்ள தடுப்பு மருந்துகள் நோய்க்கு எதிராக உயரிய அளவில் பயனுறுதி கொண்டனவாக உள்ளன. ஆனாலும் நோயெதிர்ப்புத் திறன் என்பது இல்லாத மிகச் சிறிய எண்ணிக்கையிலான மனிதர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்படியென்றால் கோவிட்-19 தடுப்பு மருந்தினை எடுத்த பின்பு கூட உங்களால் இந்த நோயினைப் பரப்ப முடியும். மற்றைய மனிதர்களுடன் நீங்கள் நெருங்கிப் பழகும்பொழுது அல்லது பொதுசன ஆரோக்கிய நடைமுறைகளை நீங்கள் பின்பற்றத் தவறினால் இது நிகழலாம்.

இல்லை. ஒருவர் கோவிட்-19 தடுப்பு மருந்தினை ஏற்றுவது முற்று முழுதாகச் சுயவிருப்பத்தின் படியே நடைபெறுகிறது. கோவிட்-19 தடுப்பு மருந்தினை எடுப்பதோ அல்லது எடுக்காமல் விடுவதோ உங்கள் தெரிவாகவே இருக்கும்.

கனடாவில் உள்ள வதிவாளர்கள் எல்லோரும் அவர்களது குடிவரவு அந்தஸ்து எதுவாக இருந்தாலும் கோவிட்-19 தடுப்பு மருந்து பெறுவதற்கு தகுதி உடையவர்களாக இருக்கிறார்கள். இதற்கு உங்களுக்கு பெறுமதி உடைய ஒரு PHN (Personal Health Number) எண் இருக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைய நிலைமையின்படி வயதில் 18 வருடங்கள் அல்லது அதனிலும் கூடியவர்கள் Moderna, AstraZeneca மற்றும் Johnson & Johnson ஆகிய தடுப்பு மருந்துகளைப் பெறும் தகைமை உடையவர்களாக இருக்கிறார்கள். வயதில் 12 வருடங்கள் அல்லது அதனிலும் கூடியவர்கள் Pfizer-BioNTech தடுப்பு மருந்தினை பெறும் தகைமையைக் கொண்டு உள்ளனர்.