நீங்கள் தடுப்பு மருந்து எடுக்கும் பொழுது

பின்வரும் தகவல் இந்த இணையத் தளத்துக்கென்று மருத்துவத் துறை நிபுணர்கள் மற்றும் பொதுசன ஆரோக்கிய வல்லுநர்களால் வரையப்பட்டுள்ளது. கனேடிய அரச அமைப்புகள் மற்றும் விஞ்ஞான, மருத்துவ மூலவளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் இதில் அடங்கி உள்ளது. மருத்துவத் துறையினரின் வைத்திய ஆலோசனையாக இதனைக் கருத வேண்டாம். கோவிட்-19 நோய் தடுப்பு மருந்து பற்றி உங்களிடம் எக்கேள்வி இருந்தாலும் தகைமை வாய்ந்த ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநர் ஒருவரின் அறிவுரையை நாடுங்கள்.

உங்களுக்கான தடுப்பு மருந்து எடுத்த பதிவேடு உங்களுடைய மாகாண அல்லது பிரதேச ஆரோக்கிய அதிகார அமைப்பில் வைத்துப் பேணப்படும். பொதுவாக காகிதத்தில்/அல்லது ஒரு மின்முறை பிரதியாக உங்களுடைய கோவிட்-19 தடுப்பு மருந்து எடுத்த பதிவேடு உங்களுக்கு வழங்கப்படும் . எவ்விதமான ஆவணம் உங்களுக்கு கொடுக்கப்படும் என்பது பற்றி தயவுசெய்து உங்கள் உள்ளூர் ஆரோக்கிய அதிகார அமைப்பில் அல்லது தடுப்பு மருந்து ஏற்றிய சிகிச்சை நிலையத்தில் கேட்டு அறியுங்கள்.

ஆம். தடுப்பு மருந்து ஏற்றப்படும் செயல்முறையை நீங்கள் புரிந்து நடப்பதற்கு உதவ அல்லது உங்களுக்கு துணையுதவி அல்லது மொழிபெயர்ப்பு உரையாடல் வசதி தேவைப்பட்டால் உங்களுடன் ஒரு நபரை அழைத்து வர முடியும்.

உங்களுடைய சந்திப்பினை உறுதி செய்கின்ற (பதிவு) ஆவணத்தின் அச்சிடப்பட்ட அல்லது மின்முறையிலான பிரதி ஒன்றினை நீங்கள் கொண்டு வருதல் வேண்டும். ஆரோக்கிய அட்டை இருக்குமென்றால் அதனையும் நீங்கள் கொண்டு வர வேண்டும்.