கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்துகள்

பின்வரும் தகவல் இந்த இணையத் தளத்துக்கென்று மருத்துவத் துறை நிபுணர்கள் மற்றும் பொதுசன ஆரோக்கிய வல்லுநர்களால் வரையப்பட்டுள்ளது. கனேடிய அரச அமைப்புகள் மற்றும் விஞ்ஞான, மருத்துவ மூலவளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் இதில் அடங்கி உள்ளது. மருத்துவத் துறையினரின் வைத்திய ஆலோசனையாக இதனைக் கருத வேண்டாம். கோவிட்-19 நோய் தடுப்பு மருந்து பற்றி உங்களிடம் எக்கேள்வி இருந்தாலும் தகைமை வாய்ந்த ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநர் ஒருவரின் அறிவுரையை நாடுங்கள்.

கோவிட்-19 நோய் வைரசுக் கிருமிக்கு எதிராக நீங்கள் தடுப்பு மருந்தினை எடுத்தால் அது அந்நோயினால் நீங்கள் சுகவீனம் அல்லது மரணம் அடையாமல் உங்களைப் பாதுகாக்க உதவுகிறது. அத்துடன், கனடாவில் கோவிட்-19 நோய் பரவுவதை தடுப்பதற்காக போதிய எண்ணிக்கையிலான கனேடியர்கள் இத்தடுப்பு மருந்தினை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. இந்நோய்க்கான வைரசு சமூகங்களினூடாகப் பரவுவதை தடுப்பு மருந்து நிறுத்த முடியும்.

தனி ஒரு நபர் கோவிட்-19 நோயினால் மரணம் அடையாத போதிலும் அவர்களுக்கு இதனால் நினைவு இழப்பு, களைப்பு, காரணம் கூற முடியாதவாறு சுவாசிப்பதில் சிரமம் மற்றும் நுரையீரல், இருதயம் போன்றவற்றுக்குப் பாதிப்பு போன்றவை நீண்டகால மருத்துவச் சிக்கல் நிலைகளாகத் தோன்றலாம்.

மக்களில் போதுமான அளவினருக்கு நோயெதிர்ப்புத் திறன் இருக்கும்பொழுது வைரசு பரவும் சாத்தியம் குறைவாகவே இருக்கும். மக்கள் மத்தியில் இவ்வாறான மந்தை முறையிலான நோயெதிர்ப்புத் திறனை அடைவதற்கு நாம் மக்கள் தொகையில் 75% அளவினருக்கு தடுப்பு மருந்தினைக் கொடுக்க வேண்டும். எமது சாதாரண அன்றாட வாழ்வுகளுக்குத் திரும்பி வியாபார நிலையங்களைத் திறந்து, மீண்டும் எமக்குப் பிரியமானவர்களைக் கண்டு அரவணைப்பதற்கு இது அவசியமாகும் .

இல்லை, எல்லா விதமான கோவிட்-19 தடுப்பு மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

ஜூன் மாத நடுவில், நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Committee on Immunization, NACI) இரண்டாவது டோஸ்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை மாற்றிப்போடுவது குறித்த தனது பரிந்துரைகளைப் புதுப்பித்தது. இந்தக் கலப்புத் தடுப்பூசி அட்டவணையில் இருந்து சாத்தியமான சிறந்த நோயெதிர்ப்புப் பதில்செயலின் தொடரும் ஆதாரங்களின் அடிப்படையில், அஸ்ட்ராஜெனெகாவின் முதல் டோஸைப் பெற்ற நபர்களுக்கு இப்போது mRNA தடுப்பூசி இரண்டாவது டோஸாகப் பரிந்துரைக்கப்படுகிறது.

முதல் டோஸாக mRNA தடுப்பூசியை (ஃபைசர் பயோஎன்டெக் அல்லது மாடர்னா) நீங்கள் பெற்றிருந்தால், இரண்டாவது டோஸாக mRNA தடுப்பூசி உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் முதன்முதலில் பெற்ற அதே வகை தடுப்பூசியைப் பெறுவது விரும்பத்தக்கது, அது தயாராக இல்லை அல்லது அறியப்படாததாக உள்ளது என்றால், அத்தகைய சூழலில் வேறு வகை mRNA தடுப்பூசியைப் பெறலாம். இரண்டுமே சம அளவில் பாதுகாப்பானவை மற்றும் திறன்மிக்கவை.

உங்கள் முதல் டோஸாக நீங்கள் அஸ்ட்ராஜெனெகாவைப் பெற்றிருந்தால், உங்கள் இரண்டாவது டோஸாக அஸ்ட்ராஜெனெகாவைப் பெற நீங்கள் தேர்வு செய்யலாம், ஆனால் உங்கள் இரண்டாவது டோஸுக்கு mRNA தடுப்பூசியை எடுத்துக்கொள்ளுமாறு NACI இப்போது பரிந்துரைக்கிறது.

கனடாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளுமே, மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் கடுமையான நோய்களையும் சமமாகவும் திறன்மிக்க வகையிலும் குறைக்கின்றன, மேலும் இவை அனைத்தும் கோவிட்-19 தொற்றால் மரணம் ஏற்படுவதைத் தடுப்பதில் ஏறத்தாழ 100% திறன்மிக்கவையாக உள்ளன.

முக்கியமான விஷயம் என்னவென்றால், முழு பாதுகாப்பிற்காக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீங்கள் காலம் கடத்தக் கூடாது. புதிய வைரஸ் வகைகள் உருவாகி வருகின்றன, அவை அதிக பாதிப்பு நிகழ்வுகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல், இறப்புகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன, இதைத் தடுப்பதற்கான ஒரே வழி பெருமளவில் தடுப்பூசி போடுவது மட்டுமேயாகும்.

Health Canada (ஹெல்த் கனடா) ஆரோக்கிய அமைப்பின் கூற்றுப்படி, பல்லாயிரக் கணக்கான தடுப்பு மருந்து பெற்ற மக்கள் அடங்கிய பரீட்சார்த்த சிகிச்சை முயற்சிகளின் அடிப்படையில் பெற்ற தகவலின் பிரகாரம், தடுப்பு மருந்துகள் மத்தியில்:

Pfizer-BioNTech (பைசர்-பயோஎன்ரெக்) தடுப்புமருந்து இரண்டு பங்களவுகள் பெற்றபின்பாக 95% அளவில் பயனுறுதி நிலை கொண்டுள்ளது.

தகவல்மூலம்: https://www.canada.ca/en/health-canada/services/drugs-health-products/covid19-industry/drugs-vaccines-treatments/vaccines/pfizer-biontech.html

Moderna (மொடேர்னா) தடுப்பு மருந்து இரண்டு பங்களவுகள் பெற்ற பின்பாக 94% அளவு பயனுறதிநிலை கொண்டுள்ளது.

தகவல்மூலம்: https://www.canada.ca/en/health-canada/services/drugs-health-products/covid19-industry/drugs-vaccines-treatments/vaccines/moderna.html

AstraZeneca (ஆஸ்ற்றா செனேகா) தடுப்பு மருந்து இரண்டு பங்களவுகள் பெற்ற பின்பாக 62% அளவு பயனுறுதிநிலை கொண்டுள்ளது. (வட/தென் அமெரிக்க ஆய்வுகளில் இதன் பயனுறுதி நிலை 79% எனக் காணப்பட்டது)
நிஜ உலகத் தரவின்படி AstraZeneca (AZ) வைத்தியசாலை அனுமதி நிகழ்வுகளைக் குறைப்பதில் 80-90% அளவு பயனுறுதிநிலை கொண்டதாகக் காணப்பட்டது.

தகவல்மூலம்: https://www.canada.ca/en/health-canada/services/drugs-health-products/covid19-industry/drugs-vaccines-treatments/vaccines/astrazeneca.html

ஜான்சன் & ஜான்சன் ஒரு டோஸ் மற்றும் நிகழ்நேர தரவுக்குப் பிறகு 66% பயனுள்ளதாக இருக்கும், இது கடுமையான நோய் மற்றும் மருத்துவமனையில் சேருவதைத் தடுப்பதில் >90% பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகிறது.

தகவல்மூலம்:https://www.canada.ca/en/health-canada/services/drugs-health-products/covid19-industry/drugs-vaccines-treatments/vaccines/janssen.html

தீவிர நிலையிலான கோவிட்-19, வைத்தியசாலை அனுமதி மற்றும் ஏற்படும் மரணங்கள் ஆகியவற்றைத் தடுப்பதில் இந்த நான்கு தடுப்பு மருந்துகளுமே உயர் அளவில் பயனுறுதி நிலை கொண்டனவாக உள்ளன.

இந்த விடயம் தடுப்பு மருந்துகளுக்கும் மாற்றுருக்களுக்கும் இடையே வேறுபட்ட நிலைமையில் உள்ளது.

கனடாவில் தற்பொழுது நிலவி வருகின்ற எந்த ஒரு மாற்றுருவினாலும் விளையக் கூடிய தீவிர சுகவீனம்/மரணம் ஆகியவற்றை இங்கு வழங்கப்படும் ஒவ்வொரு கோவிட்-19 தடுப்பு மருந்தினாலும் தடுக்கமுடிகிறது.

குறிப்பிட்ட சில கோவிட்-19 வைரசு உப வகைகளுக்கு எதிராகக் குறைவான செயல்திறன் காட்டும் தடுப்பு மருந்துகளின் விடயத்தில் கூட அவற்றின் உற்பத்தியாளர்கள் புதிதாக வந்துள்ள மாற்றுருக்களுக்கு எதிராகத் தாங்களும் தமது தடுப்பு மருந்துகளின் புதிய வார்ப்புகளை (versions)உருவாக்கி வருகின்றனர். இதன் விளைவாக எதிர்வரும் மாதங்கள் அல்லது வருடங்களில் பயனுறுதிநிலை கொண்ட னவாக செயற்படும் செயலூக்கி (booster) தடுப்பு மருந்துப் பங்களவுகள் உங்களுக்கு வழங்கப்படும் நிலை ஏற்படலாம்.

தடுப்பு மருந்துகளில் Pfizer-BioNTech, Moderna மற்றும் AstraZeneca ஆகிய மருந்துகளுக்கு இரண்டு பங்களவுகள் (doses) தேவைப்படுவது ஏனெனில் முதலாவது பங்களவு உடம்புக்குள் சென்று (உங்கள் உடம்பின் நோயெதிர்ப்பு திறன் விளைவினை) “ஆரம்பநிலைத் தயாரிப்புக்கு” (prime) உள்ளாக்குகிறது: இதன் பலனாக கோவிட்-19 நோய் வைரசுக்கு எதிராகப் போராடும் நோயெதிர்ப்புப் பொருட்களை (antibodies) தயாரிப்பதற்கு உங்கள் உடல் கற்றுக் கொள்கிறது. இரண்டாவதாகக் கொடுக்கப்படும் பங்களவு, முதல் நிகழ்ந்த செயற்பாட்டுக்கு “செயலூக்கம் வழங்கி” (boost) உங்கள் உடம்பு வீரியம் கூடிய, நீண்டகாலம் தொடருகின்ற நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கு வழிவகுக்கிறது. முழுமையான அளவில் உடம்பு நோயெதிர்ப்புத் திறனைப் பெறுவதற்கு இரண்டு பங்களவுகளும் அவசியமாக உள்ளன.

தடுப்பு மருந்துகளில் Johnson & Johnson’s வகை மருந்து பரிசோதனை செய்யப்பட்டு, ஒரு தடவை வழங்கப்படும் பங்களவுடன் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கி நோயெதிர்ப்புத் திறனைக் கொடுக்கக் கூடியதாக உள்ளதாகக் காணப்பட்டது.

Pfizer-BioNTech மற்றும் Moderna : இவை mRNA இனத் தடுப்பு மருந்துகள்

கோவிட்-19 நோய் வைரசுக் கிருமியில் காணப்படும் ஊசிமுனைப் புரதத்தினை (spike protein) உங்கள் உடல் கலங்களில் உண்டாக்குகின்ற ஒரு சிறிய துண்டு அளவிலான mRNA புரதம், உங்கள் கலங்களில் மருந்து ஏற்றுகையில் புகுந்து, கோவிட்-19 நோய்க் கிருமியினை எதிர்த்துப் போராடும் நோயெதிர்ப்புப் பொருட்களை (antibodies) உற்பத்தி செய்யும்படி உங்கள் உடம்புக்குப் பயிற்சி அளிக்கிறது. இதன் பிறகு வெகுசில மணி நேரத்தில் mRNA புரதம் அழிக்கப்பட்டு விடுகிறது என்ற போதிலும் நோயெதிர்ப்புப் பொருட்களை உண்டாக்கும் அறிவுறுத்தல்கள் கலங்களில் தங்கிவிடுகின்றன.

Astra Zeneca மற்றும் J&J: இவை நோய்காவி வைரசு இனத்தடுப்பு மருந்துகள்.

இந்த தடுப்பூசிகள் பாதிப்பில்லாத வைரஸை (பொதுவான குளிர் வைரஸ் போன்றவை) பயன்படுத்துகின்றன, அவை பலவீனமடைந்து பின்னர் COVID-19 வைரஸின் ஸ்பைக் புரதத்தின் ஒரு பகுதியை சேர்ப்பதன் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைப் போலவே இதே செயல்முறையும் நடைபெறுகிறது, ஆன்டிபாடிகளை உருவாக்க மற்றும் பிற நோயெதிர்ப்பு உயிரணுக்களை செயல்படுத்த நம் உடலைத் தூண்டுகிறது.

(DNA) இடைத்தாக்கம் எதனையும் எற்படுத்தவோ அல்லது அதனை மாற்றவோ மாட்டாது!

இத்தடுப்பு மருந்துகளில் எதிலுமே உயிர்ப்புடன் கூடிய கோவிட்-19 வைரசுக் கிருமி இருக்க மாட்டாது.

இவை எல்லாவற்றுக்கும், தடுப்பு மருந்தினை எடுத்த பின்பாக ஒரே மாதிரியான பக்கவிளைவுகள் தோன்றுகின்றன: அவை தடுப்பு மருந்து ஊசி ஏற்றப்பட்ட இடத்தில் வலி, களைப்பான உணர்வு, காய்ச்சல் அல்லது இன்புளுவன்ஸா போன்ற அறிகுறிகள், தலையிடி, இலேசான அளவில் தசைநார் /மூட்டுகளில் நோவு

கனடாவில் பயன்படுத்தவென Health Canada ஆரோக்கிய அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ள தடுப்பு மருந்துகள் : Pfizer-BioNTech, Moderna, AstraZeneca மற்றும் Janssen (Johnson & Johnson)

இல்லை. கோவிட்-19 தடுப்பு மருந்து உட்பட எந்த ஒரு தடுப்பு மருந்தினை உடம்பில் எடுத்து இருந்தாலும், அது கோவிட்-19 நோய்க்கான பரிசோதனை முடிவுகளை பாதிக்கப் போவதில்லை. ஏனெனில் தடுப்பு மருந்தில் உயிர்ப்புடைய கிருமிகள் இருப்பதில்லை.