பின்வரும் தகவல் இந்த இணையத் தளத்துக்கென்று மருத்துவத் துறை நிபுணர்கள் மற்றும் பொதுசன ஆரோக்கிய வல்லுநர்களால் வரையப்பட்டுள்ளது. கனேடிய அரச அமைப்புகள் மற்றும் விஞ்ஞான, மருத்துவ மூலவளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் இதில் அடங்கி உள்ளது. மருத்துவத் துறையினரின் வைத்திய ஆலோசனையாக இதனைக் கருத வேண்டாம். கோவிட்-19 நோய் தடுப்பு மருந்து பற்றி உங்களிடம் எக்கேள்வி இருந்தாலும் தகைமை வாய்ந்த ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநர் ஒருவரின் அறிவுரையை நாடுங்கள்.
கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்தினை உங்கள் வதிவுப் பகுதியில் பெறுகின்ற தகைமை உங்களுக்கு இருக்கிறதா என்று நீங்கள் யோசனை செய்கிறீர்கள் அல்லது அத் தடுப்பு மருந்தினை எடுப்பதற்கான சந்திப்பினை ஒழுங்கு செய்வதற்கு நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் கீழே உள்ள இணைப்பு மீது, அழுத்துங்கள். இந்த விடயம் பற்றிய மிகப்புதிய தகவலினைப் பார்வையிடுவதற்கும் நீங்கள் வசிக்கின்ற இடத்தில் தடுப்பு மருந்தை எடுக்கும் சந்திப்பினை ஒழுங்கு செய்வதில் உள்ள தெரிவுகளை அறிவதற்கும் கீழே தரப்பட்டு உள்ள இணைப்பு மீது அழுத்துங்கள்.
British Columbia (பிரிட்டிஷ் கொலம்பியா)
Alberta (அல்பேற்றா)
Saskatchewan (சாஸ்கச்சுவான்)
Manitoba (மனிற்ரோபா)
Ontario (ஒன்ராறியோ)
Quebec (கியூபெக்)
New Brunswick (நியூ பிறன்ஸ்விக்)
Nova Scotia (நோவாஸ்கோஷியா)
Newfoundland and Labrador (நியூபவுன்லன்ட் மற்றும் லாபரடோர்)
Prince Edward Island (பிறின்ஸ் எட்வேட் ஐலன்ட்)
Northwest Territories (நோர்த் வெஸ்ற் ரெறிற்ரறீஸ்)
Nunavut (நூனவுற்)
Yukon (யூக்கன்)
கனடாவில் பயன்படுத்தவென்று அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ள கோவிட்-19 தடுப்பு மருந்துகளில் பின் வரும் எதுவுமே அடங்கி இருக்க மாட்டாது: முட்டைகள், ஜெலரின், பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, கரு சிசுத் தொடர்பிலான உற்பத்திப் பொருட்கள், பாதரசம், போர்மால்டிகைட், அலுமினியம், தைம்றொசால் அல்லது இறப்பர். மேலும் உணவுக் கலை மற்றும் சமயங்கள் சார்ந்த காரணங்களால் கட்டுப்படுத்தப்படும் சேர்க்கைப் பொருட்கள் எதுவும் இவற்றில் அடங்கி இருக்க மாட்டாது.
ஒவ்வொரு தடுப்பு மருந்துக்கும் உரிய சேர்க்கைப் பொருட்களின் பூரண பட்டியலை இங்கு சென்று பார்க்க முடியும்:
Pfizer-BioNTech: https://www.canada.ca/en/health-canada/services/drugs-health-products/covid19-industry/drugs-vaccines-treatments/vaccines/pfizer-biontech.html
Moderna: https://www.canada.ca/en/health-canada/services/drugs-health-products/covid19-industry/drugs-vaccines-treatments/vaccines/moderna.html
Johnson & Johnson: https://www.canada.ca/en/health-canada/services/drugs-health-products/covid19-industry/drugs-vaccines-treatments/vaccines/janssen.html
தடுப்பு மருந்தின் தயாரிப்புக்கான படிமுறைகளில் எதுவுமே தவிர்க்கப் படவில்லை. தயாரிப்பின் பொழுது எல்லா விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. தொழில் நுட்பத் துறையில் உலகம் அடைந்து உள்ள முன்னேற்றங்களும் அங்கீகாரம் வழங்கப்படுவதில் அடங்கிய மருத்துவம் சாராத நடைமுறைகள் (நிர்வாகத் துறையினரின் நீண்ட செயல்முறைகள் மற்றும் அங்கீகாரத்துக்கான அனுமதி அச்சு வழங்குதல் போன்றவை) விரைவுபடுத்தி நிறைவேற்றப்பட்டமையும் தடுப்பு மருந்துகள் விரைவாக உபயோகத்துக்கு வந்தமைக்குக் காரணங்களாக அமைந்தன.
இல்லை. தடுப்பு மருந்தின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் புரதம் ஒரு போதும் உங்கள் பரம்பரையலகுப் பொருளுடன் இடைத்தாக்கம் எதனையும் ஏற்படுத்தவோ அல்லது அதனை மாற்றவோ மாட்டாது. தடுப்பு மருந்து ஏற்றப்பட்டு வெகு சில மணி நேரத்தில் இப்புரதம் இயற்கையில் தானாகவே அழிக்கப்பட்டுவிடுகிறது. எனினும் நோயெதிர்ப்புப் பொருட்களை உண்டாக்கும் அறிவுறுத்தல்கள் மட்டும் உடலில் தங்கிவிடுகின்றன. நீங்கள் எப்பொழுதாவது கோவிட்-19 நோய் வைரசுக் கிருமிக்கு உள்ளாகும் பொழுது நோயெதிர்ப்புப் பொருட்கள் தோன்றி விடுகின்றன.
Pfizer-BioNTech தடுப்பு மருந்து வயதில் 12 அல்லது அதற்கும் கூடிய சிறுவர்களுக்கு உபயோகிக்கலாம் என்று Health Canada (ஹெல்த் கனடா) ஆரோக்கிய அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Moderna, AstraZeneca மற்றும் Johnson & Johnson தடுப்பு மருந்துகள் வயதில் 18 அல்லது அதற்கும் கூடிய தனிநபர்களுக்கு உபயோகிக்கலாம் என்று Health Canada ஆரோக்கிய அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவர்களிலும் குறைவான வயது உள்ள பிள்ளைகளுக்கு கோவிட்-19 தடுப்பு மருந்துகள் கொடுப்பதில் உள்ள பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்கு இப்பொழுது ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
தற்சமயம் கனடா நாட்டில் வேறு விதமான நோய்த்தடுப்பு மருந்துகளை ஒருவர் எடுக்கின்ற அதே நாட்களில் கோவிட்-19 தடுப்பு மருந்து அவருக்குக் கொடுக்கப்படுதல் கூடாது. எனினும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இப்பொழுது கோவிட்-19 தடுப்பு மருந்துகளும் வேறு விதமான தடுப்பு மருந்துகளும் அவை கொடுக்கப்படும் காலத்தைப் பொருட்படுத்தாமல் வழங்கப்படுகின்றன. கோவிட்-19 தடுப்பு மருந்துகளும் வேறு விதமான தடுப்பு மருந்துகளும் ஒரே நாளில் கொடுக்கப்படும் முறையும் இதில் அடங்குகிறது. இது உங்களுக்கும் தேவையானதாகக் கருதப்படுகிறதா என்பது பற்றி நீங்கள் உங்கள் ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநருடன் கலந்துரையாடுங்கள்.
தடுப்பு மருந்தினை அநேகமாக எல்லோருமே பாதுகாப்பாக எடுக்கக் கூடியதாக இருக்கும் என்ற போதிலும், தடுப்பு மருந்தில் அடங்கியுள்ள சில கூறுப் பொருட்கள் காரணமாகத் தீவிரமான ஒவ்வாமை அலர்ஜி விளைவுகள் தோன்றுவோராக உள்ள மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள மக்கள் மட்டும் தடுப்பு மருந்தினை எடுக்காமல் அதனை தவிர்க்க வேண்டிய அவசியம் இருக்கலாம். கோவிட்-19 நோயின் ஆபத்து தொடர்ந்து நீடிக்கும் இச் சூழ்நிலையில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்படலாம். உண்மையில் சிகிச்சை முறையில் மனிதர்களைப் பலவீனப்படுத்தும் ஆரோக்கிய நிலைமைகளைப் பின்னணியில் கொண்டிருக்கும் மக்கள், கோவிட்-19 நோய்த் தொற்றினால் உண்டாகும் சிக்கலான நிலைமைகளுக்கு இலகுவில் ஆளாகிறார்கள். எனவே இத்தகைய மக்கள் தடுப்பு மருந்து அவர்களுக்கு கிடைக்கும் நிலைமை வந்த உடனே அதனை எடுக்க வேண்டும்.
பொதுவாகக் கூறுவதென்றால் நீங்கள் ஒரு சுகவீன நிலையில் (உ-ம்: ஷிங்கில்ஸ் தோல் நோய்) இருந்து குணமாகி வருகின்றீர்கள் என்றாலும், கோவிட்-19 தடுப்பு மருந்தினை எடுப்பது உங்களுக்குப் பாதுகாப்பு ஆனதாகவே இருக்கும். ஆனால் உங்களுடைய வழக்கமான செயற்பாடுகளைச் செய்யமுடியாது உங்களைத் தடுக்கும் புதிய ஒரு சுகவீனம் தோன்றி உள்ள சமயத்தில் அதில் இருந்து குணமாகும் வரையில் நீங்கள் தடுப்பு மருந்து ஏற்றுவதைத் தாமதம் செய்ய வேண்டும். இதன் மூலம் தடுப்பு மருந்தால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளை, உங்களுடைய மற்றைய நோய் மோசமாகுவதால் உண்டாகும் அறிகுறிகளில் இருந்து பிரித்து அறிய முடிகிறது. தொற்றுநோய் ஒன்று பீடித்து இருக்கும் நேரத்தில் அது குணமாகும் வரையில் நீங்கள் காத்திருப்பதனால், தடுப்பு மருந்தினை எடுப்பதற்கு நீங்கள் வரும்பொழுது உங்கள் தொற்று மற்றவர்களுக்கும் பரவாது தடுக்க உதவ முடிகிறது.
கோவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் உங்களுக்கு உண்டு என்றால், நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு அந்த நோய்க்கான பரிசோதனையைச் செய்தல் அவசியம் ஆகும்.
தடுப்பு மருந்தினை அநேகமாக எல்லோரும் பாதுகாப்பாக எடுக்க முடிகிறது. பலவீனப்படுத்தலுக்கு உள்ளான நோயெதிர்ப்பு திறன் தொகுதி அல்லது சுயமுறையான இழையத்தாக்க நோய் உள்ளவர்களின் பாதுகாப்பு பற்றி கணிசமான அளவில் கரிசனைகள் எவையும் இதுவரையில் எழவில்லை. பலவீனமுற்ற நோயெதிர்ப்புத் திறன் தொகுதி ஒன்றினைக் கொண்டிருக்கும் மக்களில் தடுப்பு மருந்து எதிர்பார்க்கும் அளவுக்கு தொழிற்படாது போகும் சாத்தியம் உண்டு. இவ்விடயம் தொடர்பில் உங்களிடம் கேள்விகள் உண்டு என்பதுடன் உங்களுக்கு பலவீனமுற்ற நோயெதிர்ப்புத் திறன் தொகுதி அல்லது சுயமுறையான இழையத்தாக்க நோய் இருக்கிறது என்றால், உங்களுடைய ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநருடன் கோவிட்-19 தடுப்பு மருந்துகள் பற்றி கதையுங்கள்.
மாதப் போக்கு என்பது ஒரு சிக்கலான பல அம்சம் கொண்ட செயல்பாடாக இருந்து வருகிறது. பல விடயங்கள் இதன் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கருப்பையின் புறணி உண்மையில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயலில் உள்ள பகுதியாக கருதப்படுகிறது. நீங்கள் தடுப்பூசி அல்லது நோய்வாய்ப்பட்டிருப்பதால் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு கடினமாக உழைக்கும்போது, எண்டோமெட்ரியம் எவ்வாறு செயல்படுகிறது என்பதில் மாற்றங்களை நீங்கள் சந்திக்க நேரிடும். இந்த வழியில் தடுப்பூசி மாதவிடாயை எப்படியாவது பாதிக்கும்.
ஆனால், நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஒரு பெரிய குழுவைப் பார்க்கும்போது, சிலர் தங்கள் மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை அனுபவிப்பார்கள். உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் தடுப்பூசிகள் வழங்கப்படுவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சியிலும் மாற்றங்களை அனுபவிக்கும் சிலர் இருப்பார்கள். தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கவலைகள் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்க போதுமான தரவு இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
கோவிட்-19 தடுப்பு மருந்து உடலில் எடுக்கப்பட்ட பின்பு வெளியேற்றப்படுவது இல்லை. எனவே சமீபத்தில் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்ட தனி நபர்களுக்கு அண்மையில் இருப்பது ஒருவரின் மாதவிடாய் நிகழ்வு வட்டத்தை பாதிக்கும் என எதிர்பார்க்க முடியாது.
தடுப்பூசி பெற்ற பிறகு உங்கள் மாதவிடாய் சுழற்சியில் நீங்கள் அனுபவிக்கும் எந்த மாற்றங்களும் தற்காலிகமானவை, எனவே இது ஒரு காட்சியைப் பெறாததற்கு ஒரு காரணமாக இருக்கக்கூடாது. இருப்பினும், கவலைகள் உள்ள பெண்கள் தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும், ஏனென்றால் மற்ற காரணங்களுக்காகவும் சுழற்சிகள் தாமதமாகும்.
கர்ப்பம் தரித்து உள்ள பெண்கள் அல்லது முலைப்பால் ஊட்டும் பெண்கள் முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று Canadian Society of Obstetrics and Gynecology (SOGC), National Advisory Committee on Immunization ஆகிய அமைப்பினர் மற்றும் கனடாவில் உள்ள பொதுசன ஆரோக்கிய நிபுணர்கள் ஆகிய எல்லோரும் அறிவுரை கூறிவருகின்றனர். அவர்களின் கூற்றுப்படி இவ்வாறான பெண்கள் தடுப்பு மருந்து பெறும் தகைமையை கொண்டவர்களாக இருந்து எதிர்மறையான காரணங்கள் எதுவும் இல்லாத பொழுது அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் (எந்த ஒரு மும்மாதப் பருவத்திலும்) அல்லது முலைப்பால் ஊட்டும் சமயத்தில் தடுப்பு மருந்து கொடுப்பது அவசியம் ஆகும். உங்களிடம் இது பற்றிய கேள்விகள் உண்டு என்றால் அத்துடன் நீங்கள் கர்ப்பம் தரித்து இருக்கிறீர்கள், கர்ப்பம் தரிப்பதற்குத் திட்டமிட்டு வருகிறீர்கள் அல்லது முலைப்பால் ஊட்டி வருகிறீர்கள் என்றால் கோவிட்-19 நோய்க்கான தடுப்பு மருந்துகளைப் பற்றி உங்களுடைய ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநருடன் கதையுங்கள்.
கோவிட்-19 நோய் தடுப்பு மருந்து உட்பட எந்த ஒரு தடுப்பு மருந்தும் ஆண்களிலோ அல்லது பெண்களிலோ அவர்களின் கருவளத்தினை (fertility) பாதிப்பதாக சான்று எதுவும் இல்லை.
கோவிட்-19 தடுப்பு மருந்தினை ஒருவர் எடுக்கக் கூடாது என்று கூறுவதற்கு மிகச் சில காரணங்கள் மட்டுமே உள்ளன.
பின்வரும் நிலைமைகளில் எதுவும் இருந்தால் நீங்கள் தடுப்பு மருந்தினை எடுக்கக் கூடாது :
1. தடுப்பு மருந்துகளில் அடங்கி உள்ள சேர்க்கைப் பொருட்களில் எதுவென்றாலும் உங்களுக்கு தீவிரமான ஒவ்வாமை அலர்ஜியினை உண்டாக்குகிறது: mRNA இனத் தடுப்பு மருந்துகளில் ஒரு சேர்க்கைப் பொருளாக அடங்கி உள்ள இரசாயனப் பொருள் ஆகிய polyethylene glycol (PEG), அரிதாக நிகழுகின்ற ஆனால் பாரதூரமான உயிராபத்து வகை ஒவ்வாமை ஒன்றுடன் (anaphylaxis) தொடர்புபட்டதாக அறியப்பட்டு உள்ளது. இந்த இரசாயனப் பொருள் சில அழகு சாதனப் பொருட்கள், தோல்பராமரிப்பு உற்பத்திப் பொருட்கள், பேதிமருந்துகள், பதனிடப்பட்ட உணவுகள் பானங்களிலும் வேறு பொருட்களிலும் அடங்கி இருப்பதுண்டு. குறிப்பு: இந்த PEG என்ற பதார்த்தம் AstraZeneca மற்றும் Johnson & Johnson ஆகிய இரு தடுப்பு மருந்துகளில் சேர்க்கைப் பொருளாக இல்லை. ஆனாலும் பாரதூரமான முறையில் அரிதாக நிகழும் ஓர் ஒவ்வாமையுடன் தொடர்பு பட்டதாக அறியப்பட்டு, இவ்விரு தடுப்பு மருந்துகளிலும் அடங்கி உள்ள வேறொரு இரசாயனப் பொருள் Polysorbate 80 ஆகும். இதுவும் மருத்துவ தயாரிப்புப் பொருட்களிலும் (உ-ம்: விற்றமின் எண்ணெய்கள், குளிசைகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்புப் பொருட்கள்) அழகுசாதனப் பொருட்களிலும் அடங்கி இருப்பதுண்டு.
2. முன்பு உங்களுக்கு கொடுக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பு மருந்துப் பங்களவு ஒன்றினால் அல்லது அதில் அடங்கி இருந்த சேர்க்கைப் பொருள் ஒன்றினால் உங்களுக்கு உயிர் ஆபத்தான விளைவு ஒன்று ஏற்பட்டது உண்டு.
நீங்கள் ஒரு அனாபிலாக்டிக் எதிர்வினை கொண்டிருந்தீர்கள், ஆனால் காரணம் தெரியாவிட்டால் உங்கள் சுகாதார வழங்குநரிடம் பேசுங்கள். தடுப்பூசிகளுக்கு (anaphylaxis) தீவிரமான, உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினைகள் மிகவும் அரிதானவை – மக்கள் நினைப்பதை விட மிகவும் அரிதானது. அனாபிலாக்ஸிஸ் பல சந்தர்ப்பங்களில் தடுக்கக்கூடியது மற்றும் எல்லா நிகழ்வுகளிலும் சிகிச்சையளிக்கக்கூடியது. கனடாவில் உள்ள அனைத்து நோயெதிர்ப்பு சுகாதார வழங்குநர்களும் பயிற்சியளிக்கப்பட வேண்டும் மற்றும் உடனடியாக அனாபிலாக்ஸிஸைக் கவனித்து சிகிச்சையளிக்க வேண்டும். அரிதாக, ஒரு ஒவ்வாமை மற்றும் மருத்துவ சுகாதார அதிகாரியின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஒரு நபர் ஒரு மருத்துவமனை அமைப்பில் தடுப்பூசி பெறலாம்.
உங்கள் தடுப்பூசி சந்திப்புக்கு நீங்கள் மது அருந்துவது அல்லது குடிபோதையில் வருவது பரிந்துரைக்கப்படவில்லை. இது ஒரு தடுப்பூசி பாதுகாப்பு அக்கறை காரணமாக அல்ல (ஆல்கஹால் தடுப்பூசியில் தலையிடுகிறது) ஆனால் தடுப்பூசிகளைக் கொடுப்பதற்கு முன்பு சுகாதார வழங்குநருக்கு உங்கள் தகவலறிந்த ஒப்புதல் தேவைப்படுவதால். சுகாதார தகவல்களை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கும் கேள்விகளைக் கேட்பதற்கும் உங்கள் திறனை ஆல்கஹால் பாதிக்கலாம் (குறைக்கலாம்).
ஆல்கஹால் பயன்பாடு மற்றும் COVID-19 தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றி எந்த ஆய்வும் இல்லை. ஆல்கஹால் பயன்பாட்டுக் கோளாறு (AUD) உடன் போராடுபவர்களுக்கு சமரசம் (பலவீனமான) நோயெதிர்ப்பு அமைப்பு இருக்கலாம் மற்றும் அவர்களின் சுகாதார வழங்குநரிடம் பேச வேண்டும். நிபுணர்களின் கருத்து என்னவென்றால், மிதமான அளவு ஆல்கஹால் பயன்பாடு தடுப்பூசிக்கான நோயெதிர்ப்பு மறுமொழியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
நீங்கள் கஞ்சா உபயோகிக்கிறீர்கள் என்றால், கோவிட்-19 தடுப்பு மருந்து எடுப்பது உங்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும்.
உங்கள் சந்திப்புக்கான நேரம் வரும்போது, நீங்கள் உயர்ந்தவராக இருக்கக்கூடாது என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது ஒரு தடுப்பூசி பாதுகாப்பு அக்கறை காரணமாக அல்ல (மரிஜுவானா தடுப்பூசியில் தலையிடுகிறது) ஆனால் தடுப்பூசிகளைக் கொடுப்பதற்கு முன்பு சுகாதார வழங்குநருக்கு உங்கள் தகவலறிந்த ஒப்புதல் தேவை என்பதால். மரிஜுவானா சுகாதார தகவல்களை முழுமையாக புரிந்துகொள்வதற்கும் கேள்விகளைக் கேட்பதற்கும் உங்கள் திறனைக் குறைக்கலாம் (குறைக்கலாம்).
கஞ்சா பயன்பாடு மற்றும் COVID-19 தடுப்பூசிகளின் செயல்திறனைப் பற்றி எந்த ஆய்வும் இல்லை. கஞ்சா புகைத்தல் ஒரு நபரின் சுவாச அமைப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறன் ஆகியவற்றில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் வெளிவருகின்றன, எனவே நீங்கள் புகைபிடித்தால் வைரஸிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள COVID-19 தடுப்பூசியைப் பெறுவது இன்னும் முக்கியமானது.